Friday, August 7, 2009

எங்கெங்கு காணினும் இயேசுவடா!

இயேசுவானவர் ஒருநாள்
யாருமற்ற தெருவொன்றின்
சாலையோரத்தில்
நிர்வாணமாய் நின்றிருந்த
மனநிலை சரியில்லாதவளுக்கு
காமஇச்சைகள் ஏதுமற்று
அவளது ஆடைகளைசரிசெய்து
அழுதிருந்தார்


வேறொருநாள் வேறோருடத்தில்
தன்ஆடைகள் அழுக்காவதைப்
பொருட்படுத்தாது
தள்ளுவண்டிகாரனின் மூட்டைகளை
சரிசெய்து கொடுத்து
இவ்வுலகின் இதயங்கள்
செவிடாகும்படியாக
"வருந்தி பாரம் சுமப்பவர்களே!
என்னிடத்தில் வாருங்களென"
கூவிக்கொண்டிருந்தார் மௌனமாய்....


மற்றுமொரு நாளில்
"ஒளியான அவர்
இவ்வுலகில் வாழ்ந்தார்"
என்னும்படியாக
பார்வையற்ற ஒருவரை
கைப்பிடித்து
சாலையை கடக்கச் செய்தார்


தேநீர்கடைச் சிறுவனோடு
அப்பங்களை பகிர்ந்துண்டவாறும்.........


வயதான மூதாட்டியின்
மலமிருந்த கால்களை
கழுவியவாரும்......


எங்கெங்கு காணினும் திரிந்திருந்த
இயேசுவானவரை ஒவ்வோரிடத்திலும்
சிக்கென பிடித்திறுக்கி
முத்தமிட்டவாறு சொன்னேன்......
"நீயே வழியும் சத்தியமும்
ஜீவனுமாயிருக்கிறாய்"

2 comments:

  1. ஏசுவாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பதே வேண்டும்

    ReplyDelete